News August 29, 2024

டூவிலர்கள் நேருக்கு நேர் மோதியதில் பெண் உயிரிழப்பு

image

உசிலம்பட்டி அருகேயுள்ள கொசவபட்டியை சோ்ந்தவர் ஈஸ்வரி. இவர் தனது கணவருடன் நேற்று (ஆக.28) கொசவபட்டியிருந்து ஆண்டிபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார். டி.ராஜகோபாலன்பட்டி பகுதியில் சென்றபோது எதிரே முருகன் என்பவர் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் இவர்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 10, 2025

தேனி: சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்; கிராம மக்கள்

image

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியில் மனமகிழ் மன்ற பார்க்கு அனுமதி வழங்க கூடாது என ஒட்டு மொத்த கிராம மக்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். அப்படி அனுமதித்தால் வரும் 2026ம் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என பெரிய பேனர்களை ஆங்காங்கே வைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

News November 9, 2025

தேனி அருகே ஓட்டுநரை தாக்கி ஆட்டோ திருட்டு

image

பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவசக்திவேலன். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். தேனி புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் உப்பார்பட்டி செல்லவேண்டும் என கூறவே. ஆட்டோவில் சென்று கொண்டி இருந்த போது இடையில் ஆட்டோ டிரைவர் சிவசக்திவேலனை தாக்கி 3பேரும் ஆட்டோவை கடத்தி சென்று விட்டனர். வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

News November 9, 2025

தேனியில் பரவும் குண்டு காய்ச்சல்

image

தேனி மாவட்டத்தில் தற்போது குளிர் காலம் தொடங்குவதால், சில பசுக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கால்நடை துறையினர் கூறுகையில், இந்த வகை காய்ச்சல் கொசு மற்றும் ஒரு வித பூச்சி கடியால் ஏற்படுகிறது. கால்களில் குழம்புகளில் முன்னும் பின்னும் குண்டு போன்று ஏற்படும். எனவே இதை குண்டு காய்ச்சல் என்றும் அழைக்கின்றனர். இது 3 நாட்களில் சரியாகி விடும் அச்சம் தேவையில்லை என தெரிவித்தனர்.

error: Content is protected !!