News April 27, 2024
டீக்கடைக்காரர் மகன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் டீக்கடை வைத்து நடத்தி வரும் வேல்முருகன். இவர் மகன் பேச்சி (26) கடந்த வாரம் வெளியான யூபிஎஸ்சி தேர்வில் 576வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தற்போது நெல்லை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அவரை பல்வேறு தரப்பினர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 21, 2025
நெல்லையில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

திருநெல்வேலியில் செயல்படும் தனியார் சோலார் நிறுவனத்தில் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இளங்கலை அறிவியல்(BSC) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மாத ஊதியமாக 25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
News April 21, 2025
பைக் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

நெல்லை கேடிசி நகரை சேர்ந்தவர் ஜெப்ரின் சாமுவேல் (22). இவர் திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று அவர் தனது இருசக்கர வாகனத்தில் டக்கரம்மாள்புரம் அருகே சென்ற போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சாமுவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 21, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.20] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.