News January 25, 2026
டி20 WC-ல் பாகிஸ்தான் விளையாடுவது உறுதி

டி20 WC-ல் பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகம் <<18949883>>என்று பரவிய தகவலுக்கு <<>>முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. டி20 WC-க்கான அணியை பாகிஸ்தான் அறிவித்ததே அதற்கு காரணம். பாகிஸ்தான் அணி: சல்மான் அலி அகா(C) அப்ரார் அகமது, பாபர் ஆஸம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், கவாஜா (WK) , முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்ஸா, நசீம், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஷாஹீன் அப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.
Similar News
News February 11, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 11, தை 28 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: நவமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News February 11, 2026
அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: கனிமொழி

‘ஆட்சியில் பங்கு’ வேண்டும் என காங்., MP மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆட்சியில் பங்கு வேண்டும் என்று ஒரு சிலர் பேசுகின்றனர்; அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது என்று கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். மேலும், திமுக-காங்., கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை; சட்டப்பேரவை தேர்தலில் இணைந்து செயல்படுவோம் என்றார்.
News February 11, 2026
கேசவவிநாயகம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த RSS

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் நீக்கப்பட்டது விவாதப்பொருளாக மாறியது. இந்நிலையில், இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை; வழக்கமான நடைமுறைதான் என்று RSS விளக்கமளித்துள்ளது. மேலும், கேசவவிநாயகம் இனி மாநில சமுதாய நல்லிணக்க பொறுப்பாளராகவும், வட தமிழக செயற்குழு உறுப்பினராகவும் செயல்படுவார் எனவும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


