News November 8, 2025

டி20-யில் புதிய வரலாறு படைத்தார் அபிஷேக் சர்மா

image

இந்தியாவின் இளம் அதிரடி வீரரான அபிஷேக் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்துள்ளார். குறைந்த பந்துகளில்(528) ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஆஸி.,க்கு எதிரான கடைசி டி20-யில், 14 ரன்களை கடந்த போது இந்த சாதனையை அபிஷேக் தனதாக்கினார். அவருக்கு அடுத்த இடங்களில் குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்த வீரர்கள் யார் யார் என்பதை மேலே SWIPE செய்து பாருங்கள்.

Similar News

News December 1, 2025

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்

image

கார்த்திகை திருநாளில்(டிச.3) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என மதுரை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. உச்சி பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் எழுமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார். மலை உச்சியில் ஆய்வு செய்த ஜட்ஜ் G.R.சுவாமிநாதன், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

News December 1, 2025

3 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை

image

சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நாளை(டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே கனமழை பெய்துவரும் நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. மேலும், பல மாவட்டங்களில் மழை நீடிப்பதால் அங்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 1, 2025

தோட்டக்கலைத் துறையில் திமுக ஊழல்

image

தோட்டக்கலைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ₹136 கோடியில் முறைகேடு நடந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகார் தொடர்பான செய்திகள் வெளிவந்தும் இன்னும் ஏன் CM ஸ்டாலின் பதிலளிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கம்போல் வெள்ளை பேப்பரை தூக்கிகாட்டி உருட்டாமல், செலவினங்கள் மற்றும் டெண்டர் நடைமுறைகள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!