News January 22, 2026
டி20 உலகக் கோப்பையை புறக்கணித்த வங்கதேசம்

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. முன்னதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேச அணியின் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வைத்த கோரிக்கையை ஏற்க ஐசிசி மறுத்துவிட்டது. இதனால், குரூப் சி-யில் வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 11, 2026
சம்பளம் இல்லாமல் நடிக்கும் ரஜினி – கமல்

நெல்சன் இயக்கும் ‘THALAIVAR 174’ படத்திற்காக ரஜினியும், கமலும் சம்பளம் இல்லாமல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக, படத்தின் லாபத்தில் அவர்களுக்கு பங்களிக்கப்பட உள்ளதாம். சுமார் 46 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்க உள்ள இப்படத்தை இன்பன் உதயநிதி தயாரிக்க, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக புதிய அவதாரம் எடுத்துள்ளனர்.
News February 11, 2026
ஆண்களே.. இதை செய்தால் உங்க தலைமுடி Soft ஆகும்

தலைமுடியை பராமரிப்பதில் சரியாக அக்கறை காட்டாததால்தான் உங்கள் முடி வறண்டு போய் இருக்கிறது. இதனை சாஃப்ட் ஆக்க, தலைக்கு குளித்த பின் சல்பேட், பாரபென் இல்லாத கண்டிஷனரை பயன்படுத்துங்கள். வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு கண்டிஷனர் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து அலசினால் போதும். அத்துடன், தினமும் ஆர்கன் ஆயில் இருக்கும் சீரமை தலைக்கு தடவுங்கள். அனைத்து ஆண்களுக்கும் SHARE THIS.
News February 11, 2026
₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தது முக்கிய அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்திருப்பதால், எவ்வளவு உயர்த்தப்படும் என பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ₹2,000 ஆக உயர்த்தப்படும் என்றும், மார்ச் முதல் உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகையை அரசு விடுவிக்கும் எனவும் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், மார்ச் முதல் மகளிர் உரிமைத் தொகை ₹2,000 வழங்குவதற்கான சாத்தியமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


