News June 4, 2024

டி.ஆர்.பாலு காருக்கு அனுமதி மறுப்பு

image

வாக்கு எண்ணும் மையத்தில் ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் காருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காருக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் அலுவலரிடம் டி.ஆர்.பாலு முறையிட்டுள்ளார். சற்று நேரத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ள நிலையில், இச்சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. பொதுவாக, வாக்கு மையத்திற்கு 100 மீட்டருக்கு முன்பே வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 21, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் இடங்கள்!

image

காஞ்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு நகர் சாய் மனோன்மணி திருமண மண்டபத்திலும், திருப்பெரும்புதூர் வட்டம் திருமங்கலம் ஊராட்சி குரு மஹாலிலும், உத்திரமேரூர் வட்டம் திருமுக்கூடல் R.R.K திருமண மஹால்,
குன்றத்தூர் நகர்ப்புற பஞ்சாயத்துக்கு மலையம்பாக்கம் வி.எம்.ஆர் திருமண மஹாலிலும் நடைபெற உள்ளது.

News August 20, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

காஞ்சிபுரத்தில் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடங்கள்!

image

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களை இங்கு காணலாம். ▶️அறிஞர் அண்ணா இல்லம் ▶️ஏகாம்பரேஸ்வரர் கோயில் ▶️கைலாசநாதர் கோயில் ▶️குன்றத்தூர் முருகன் கோயில் ▶️காஞ்சிபுரம் ஜமா மஸ்ஜித் ▶️வல்லக்கோட்டை முருகன் கோயில் ▶️உத்திரமேரூர் வைகுந்த பெருமாள் கோயில். காஞ்சியில் உள்ள சுற்றுலாத் தளங்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க. காஞ்சியில் பேமஸ்னு நினைக்கிற இடங்களை கமெண்டில் சொல்லுங்க!

error: Content is protected !!