News March 5, 2025
டிரோன் பறக்க தடை: மீறுவோர் மீது நடவடிக்கை

தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவ்விரண்டு நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி டிரோன்கள் பறக்க விடுவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 21, 2025
பனப்பாக்கத்தில் மர்மமான முறையில் முதியவர் சாவு

பனப்பாக்கம் காந்தி சிலை அருகில் நேற்று, 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் திருத்தணியை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரிந்தது. இவர் எப்படி இறந்தார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 21, 2025
31 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது

அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1994 ஆம் ஆண்டு, ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான நிலைய படைவீரர் சவுத்ரி என்பவர், அவரது மனைவியை பாஸ்கர் ஜோதி கோகாயுடன் சேர்ந்து கொலை செய்தார். இந்த வழக்கில் 2ம் குற்றவாளியான பாஸ்கர் ஜோதி கோகாய் 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தார். இந்நிலையில் அவர் அசாம் மாநிலத்தில் இருப்பதாக தகவல் அறிந்து, அரக்கோணம் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
News April 20, 2025
ராணிப்பேட்டையில் ஆசிரியரிடம் செயின் பறிப்பு

பனப்பாக்கம் புது தெருவில் வசிப்பவர் கிருபாகரன் இவரது மனைவி அபிதா (49) தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். நேற்று முன் தினம் தலைமை ஆசிரியை வீட்டின் மாடிப்பகுதியில் தனியாக இருந்துள்ளார். அப்போது நைட்டி அணிந்து கொண்டு வந்த மர்ம நபர் ஆசிரியையின் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதை அறிந்த மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதைப்பற்றிய விசாரணை நடக்கிறது.