News July 9, 2024

டிரோன்கள் பறக்கத் தடை – ஆட்சியர் உத்தரவு

image

தருமபுரியில் ஜூலை 11ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதால் அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6  மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

Similar News

News August 21, 2025

சேலத்தில் நாய்க்கடிக்கு உயிர் பலி; இதை பண்ணுங்க!

image

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் ரேபிஸ் தொற்று தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தெரு நாய்கள் தொந்தரவு அல்லது நாய்க்கடி போன்ற பிரச்சனைகள் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக 0427-2212844 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து உதவுங்கள்.

News August 21, 2025

சேலம்: ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த கட்டுப்பாடு!

image

“சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது”- மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி தெரிவிப்பு.

News August 21, 2025

ஆக.22, 26-ல் சில ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்!

image

தண்டவாள புதுப்பித்தல் பணிகள் காரணமாக, ஆக.22, 26-ல் கண்ணூர்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். பாலக்காடு முதல் கோவை வரை இயக்கப்படாது. கோவை- மதுரை எக்ஸ்பிரஸ் ரயில், பொள்ளாச்சியில் இருந்து புறப்படும். போத்தனூர்- மேட்டுப்பாளையம் ரயில் கோவையில் இருந்து புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!