News February 6, 2026

டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா?

image

தொலைந்த டிரைவிங் லைசென்ஸை RTO அலுவலகம் செல்லாமலேயே ஆன்லைனில் பெறலாம் *<>பரிவஹன்<<>> போர்ட்டலுக்கு செல்லவும் *அதில் ‘Drivers/ Learners License’ஐ கிளிக் செய்து, மாநிலத்தை செலக்ட் செய்யவும் *‘Apply for Duplicate License’ஐ கிளிக் செய்து, விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும் *உங்களின் ஆவணங்களை ஸ்கேன் செய்து Upload செய்யவும் *கட்டணத்தை கட்டிய பிறகு, சில நாள்களில் டூப்ளிகேட் கிடைத்து விடும்.

Similar News

News February 13, 2026

SHOCKING: கொலை செய்ய தயாரான AI

image

AI இவ்வளவு ஆபத்தானதா? ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய AI மாடல் அழுத்தமான சோதனையின்போது அபாயகரமாக செயல்பட்டதாக அதன் கொள்கைத் தலைவர் டெய்சி மெக்ரிகோர் கூறியுள்ளார். அந்த மாடலை நிறுத்தப்போவதாக அதனிடம் கூறியபோது, அது பொறியாளரை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தியதாக கவலை தெரிவித்தார். சிந்திக்கும் திறன்களை கொண்ட AI மீதான கட்டுப்பாடு இல்லையென்றால் அது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இது சான்றாகும்.

News February 13, 2026

நான் வீசிய Bomb தாறுமாறா வெடிக்குது: விஜய்

image

விக்ரவாண்டி மாநாட்டில் தான் வீசிய Political Bomb அனைத்து கூட்டணியிலும் தற்போது வெடித்துக்கொண்டிருப்பதாக விஜய் கூறியுள்ளார். CM ஸ்டாலின் பதறுவதாக கூறிய அவர், ஆட்சியில் பங்கு TN-க்கு ஒத்துவராது என CM சொல்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவை பொறுத்தவரை ஆட்சி அமைக்க மட்டுமே கூட்டணி எனவும் மற்றவைக்கு அவர்கள் தனி அணி எனவும் விமர்சித்துள்ளார்.

News February 13, 2026

மேலும் ₹500 உயர்வு.. ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி

image

ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இத்தொகை ₹1,500 ஆக உயர்த்தப்படும் என சமீபத்தில் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஒருகால பூஜை நடத்தும் அர்ச்சகர்களுக்கு ₹1,500 வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும், இத்திட்டத்திற்கு ₹25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!