News December 26, 2025

டிரைவர் வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம், நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள ஒரு ஓட்டுநர் பணி நிரப்பப்பட உள்ளது. மாத ஊதியமாக ரூ.13,500 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள, மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 29, 2026

திருச்சி: காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

image

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சாமுவேல் ஞானம் என்பவர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வீரங்கிநல்லூரை சேர்ந்த புகார்தாரர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யாமல் இருக்க ரூ.50,000 லஞ்சம்பெற்ற அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதம் விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி: அரசுப் பேருந்து மோதி வியாபாரி பலி

image

திருச்சி மாவட்டம் வளநாட்டைச் சேர்ந்தவர் வளையல் வியாபாரியான ராமு. இவர் நேற்று பொன்னக்கோன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற வளைகாப்புக்கு சென்று வளையல் கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றார். அப்போது கல்லாமேடு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!