News March 22, 2025
டிராக்டர் மோதி மூதாட்டி பலி

கள்ளக்குறிச்சியை அடுத்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிளியம்மாள்(70). இவர் நேற்று மாலை, தனது மகளுடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். மேட்டுக்காலனி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பதிவு எண் இல்லாத டிராக்டர் டிப்பர் பின்பக்கம் வந்து மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே கிளியம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 22, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்( 22.3.2025 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
News March 22, 2025
கிணற்றில் தவறு விழுந்த வாலிபர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள, பாண்டியன் குப்பம் கிராம ஊராட்சி மன்ற தலைவரின் மகன், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த சின்னசேலம் போலீசார்,வழக்கு பதிவு செய்து.தற்போது, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News March 22, 2025
குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது

கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. அதில், ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது. ஷேர் பண்ணுங்க