News April 17, 2024
டிராக்டர் மீது பைக் மோதி இருவர் உயிரிழப்பு

கமுதி செங்கப்படையை சேர்ந்தவர் முனியசாமி (35). இவரும், இவரது உறவினர் பாண்டி (36) என்பவரும் பைக்கில் நேற்று சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சோலார் மின் உற்பத்தி மையம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதியது. இதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். பாண்டி படுகாயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்தார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 13, 2026
ராமநாதபுரம்: உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply!

ராம்நாடு மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்கு <
News February 13, 2026
சிறுமிக்கு பாலியல் தொல்லை 20 ஆண்டு சிறை 5000 அவதாரம் விதிப்பு

திம்மநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த செல்வ பெருமாள் பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு கமுதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸôர் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்தது. இந்நிலையில் பாலியல் தொல்லை அளித்த இளைஞர் செல்வபெருமாளுக்கு 20 வருடம் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கவிதா உத்தரவிட்டார்.
News February 13, 2026
ராமநாதபுரம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <


