News January 23, 2026

டிராக்டர் மீது ஆட்டோ மோதி விபத்து – பெண் பலி

image

சென்னை, வெட்டுவாங்கேணியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன்(27). இவர் தனது மனைவி பவித்ரா(23) மற்றும் மகனுடன் நேற்று சேத்தியாதோப்பு அருகே ஆட்டோவில் சென்ற போது, முன்னாள் சென்ற டிராக்டர் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில், பவித்ரா சம்பவயிடத்திலே உயிரிழந்தார். காயம் அடைந்த சௌந்தர்ராஜன், மகன் சிவமித்திரன் ஆகியோர் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News January 27, 2026

கடலூர்: ஒரே கருவறையில் 18 அம்மன் கொண்ட கோயில்!

image

கடலூர் அருகே காரைக்காடு பகுதியில் பச்சைவாழியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் லில் வேறெங்கும் காணாத வகையில், ஒரே கருவறையில் 18 அம்மன்களை தரிசனம் செய்யலாம். வெள்ளிக்கிழமைகளில் திருமண தடை நீக்க இங்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. கோயிலை சுற்றிலும் அனைத்து காவல் தெய்வங்களுக்கும் சுதை சிற்பங்கள் இருப்பது சிறப்பம்சமாகும். இக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. SHARE IT!

News January 27, 2026

கடலூர்: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

கடலூர் மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாட்களுக்குள் முறையான தீர்வு கிடைக்கும். SHARE IT.

News January 27, 2026

கடலூர்: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<> இங்கு கிளிக் <<>>செய்து பிப். 4க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!