News April 18, 2025
டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு

கழுகுமலை அருகே உள்ள வள்ளிநாயகாபுரம் மேல தெருவை சேர்ந்த விவசாயி நாகராஜ் (53) . இவர் நேற்று உழவு பணி மேற்கொள்ள தனக்கு சொந்தமான டிராக்டரை ஓட்டிக்கொண்டு வள்ளிநாயகபுரம் – கழுகுமலை சாலையில் உள்ள நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது டிராக்டர் நிலை தடுமாறி ஓடையில் தலைகுப்புற கவிழ்ந்ததில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 7, 2025
தூத்துக்குடியில் சிறுபான்மையினர் நலக்கூட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் சொ.ஜோ.அருண் ஆகஸ்ட் 20ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிறார். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு சிறுபான்மையினர் பிரதிநிதிகளை சந்தித்து அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளார். இந்நிகழ்வில் பொதுமக்கள் கலந்துகொள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.
News August 7, 2025
தூத்துக்குடி: EXAM இல்லாமல் GOVT வேலை.. APPLY பண்ணுங்க!

தமிழக அரசின் TN Rights திட்டத்தில் பணிபுரிய 25 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலையில் சேர விண்ணப்பிக்கலாம். 20,000 முதல் 1.25 லட்சம் வரை சம்பளம் . இத்திட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13ம் தேதி வரை பெறப்படுகிறது. <
News August 7, 2025
ஆகஸ்ட் 13ல் ஆர்ப்பாட்டம்.. தூத்துக்குடியில் ஏஐடியூசி அறிவிப்பு

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு ஏஐடியுசி அகில இந்திய தலைவர் சங்கர் பேட்டியளித்தார். மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலணிகள், கையுறை, ரெயின் கோட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி வரும் ஆகஸ்ட் 13ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.