News March 2, 2025
டிராக்டர் ஓட்டும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் டிராக்டர் ஓட்டும் பயிற்சி மதுரையில் வழங்கப்படுகிறது. 22 நாள் நடைபெறும் இப்பயிற்சியில் 25 பேர் கலந்து கொள்ளலாம். இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதிற்குள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94436 77046, 99443 44066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 6, 2026
மதுரை: அமைச்சர் பி.மூர்த்திக்கு ரூ.13.58 கோடி சொத்து

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அமைச்சருமான பி.மூர்த்திக்கு ரூ.10.81 கோடி அசையா சொத்துகளும், ரூ.2.77 கோடி அசையும் சொத்துகளும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் மூர்த்தியின் மனைவி செல்லம்மாள் பெயரில் ரூ.1.35 கோடி சொத்துகள் உள்ளன.
News April 6, 2026
மதுரை: சற்று நேரத்தில் சாத்தான்குளம் வழக்கில் தண்டனை

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் 9 போலீசாருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.
News April 6, 2026
மதுரை: பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்தால்.. இத பண்ணுங்க!

மதுரை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <


