News January 18, 2026

டிரம்ப் வரி விதிப்பைக் கண்டிக்கும் ஐரோப்பிய நாடுகள்

image

கிரீன்லாந்து ஒப்பந்தத்தை எதிர்த்த நாடுகளுக்கு எதிராக டிரம்ப் விதித்துள்ள வரிகளை ஐரோப்பிய நாடுகள் கண்டித்து வருகின்றன. நட்பு நாடுகளின் மீது வரிகளை விதிப்பது தவறு என்று பிரிட்டிஷ் பிரதமர், வரிகள் மூலம் அச்சுறுத்தல்களைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிரான்ஸ் அதிபர் மற்றும் தங்கள் சொந்த, அண்டை நாடுகளின் நலனுக்காகவே எப்போதும் துணை நிற்போம் என்று ஸ்வீடன் பிரதமர் ஆகியோர் கூறியுள்ளார்.

Similar News

News January 29, 2026

வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க..

image

சிறிய மண் கலசம், உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி, பருப்பு, நவதானியம், குங்குமப்பூ. கஸ்தூரி, ஜவ்வாது, ஐம்பொன், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வியாழக்கிழமை இரவே தயாராக வைத்து கொள்ள வேண்டும். கலசத்திற்கு விபூதி, சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். அடுத்த நாள் காலை 6- 7 மணிக்குள் அனைத்து பொருள்களையும் கலசத்தில் போட்டு பூஜை அறையில் மகாலட்சுமி முன் வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

News January 29, 2026

பிப்.2-ல் விஜய் இதை அறிவிக்கிறாரா?

image

வரும் பிப்.2-ம் தேதியுடன் தவெக தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில், பனையூர் தவெக அலுவலகத்தில் விஜய் தலைமையில் 3-ம் ஆண்டு தொடக்க விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அன்றைய தினம் தேர்தலுக்கான முதல்​கட்ட வேட்​பாளர் பட்​டியலை விஜய் அதிகாரப்பூர்வமாக வெளி​யிடு​வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெண்​களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்​கப்​படும் என்று கூறப்​படு​கிறது.

News January 29, 2026

OPS இதற்குதான் ஏங்குகிறார்: KC பழனிசாமி

image

OPS-க்கு திமுகவில் அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா என்பது தெரியவில்லை என KC பழனிசாமி கூறியுள்ளார். உழைத்து மேலே வருபவர்கள் தன்னையே நம்புவார்கள்; அதிர்ஷ்டத்தில் வருபவர்கள் தொடர்ந்து அதிர்ஷ்டத்தையே பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்றார். மேலும், 3 முறை அதிர்ஷ்டத்தில் கிடைத்த முதல்வர் பதவி மீண்டும் கிடைக்காதா என OPS ஏங்குவதாகவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!