News March 26, 2026
டிரம்ப் நரகத்தை காட்டுவார்: வெள்ளை மாளிகை

தனது தோல்வியை ஏற்காவிட்டால் ஈரான் கடுமையாக தாக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. டிரம்ப் சற்றும் பின்வாங்க மாட்டார்; அவர் நரகத்தை காட்டுவார் என்று வெள்ளை மாளிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். இந்த போர் தற்போது 4-வது வாரத்தில் உள்ளது. ஒருபுறம், பாகிஸ்தானும் துருக்கியும் மத்தியஸ்தம் செய்ய முயற்சிக்கின்றன. ஆனால் ஈரான் சரணடைவது மட்டுமே ஒரே வழி என்பதை வாஷிங்டன் தெளிவுபடுத்தி வருகிறது.
Similar News
News March 31, 2026
சசிகலாவுடன் கூட்டணி இல்லை: திருமாறன் ஜி

NDA-வில் இருந்து விலகி, சசிகலாவுடன் கூட்டணி அமைத்து மதுரை தெற்கு தொகுதியில் திருமாறன் ஜி (SIFB)போட்டியிடுவதாக செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், NDA கூட்டணியில்தான் தென் இந்திய பார்வர்டு பிளாக் அங்கம் வகிப்பதாகவும், இதை கெடுக்கும் வகையில் தவறான செய்தி பரப்பப்படுகிறது என்றும் கூறினார். கட்சியின் தொண்டர்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

CM vs எதிர்க்கட்சி தலைவர்.. நேரடியாக விவாதம்

கேரளாவில் தனது ஆட்சியில் நடந்தவை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சதீசனுடம் விவாதிக்க தயார் என பினராயி விஜயன் அறிவித்துள்ளார். ஏப்.9-ல் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், CM-ம் எதிர்கட்சி தலைவரும் விவாதத்துக்கு தயாராவது அரசியல் களத்தை அனல்பறக்க செய்துள்ளது. இந்த விவாதம், சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க மக்களுக்கு உதவும் எனவும் இதுபோல மற்ற மாநிலங்களிலும் நடக்கலாம் என்றும் பலர் கூறுகின்றனர். உங்கள் கருத்து?