News January 11, 2026
டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க முடியாதா?

வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா, தனது அமைதிக்கான நோபல் பரிசை டிரம்பிற்கு தர விரும்புவதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், ஏற்கனவே ஒருவருக்கு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்ட நோபல் பரிசை வேறு எவருக்கும் மாற்றவோ, பகிர்ந்து கொள்ளவோ முடியாது என நார்வே நோபல் அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, 8 போர்களை நிறுத்தியதற்கு தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார்.
Similar News
News February 2, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 599 ▶குறள்: பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
▶பொருள்: யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.
News February 2, 2026
மத்திய பட்ஜெட்டில் இதற்கு ₹10,000 கோடி

இந்தியாவை ஓர் உலகளாவிய உயிர்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யும் மையமாக மேம்படுத்த ‘பயோ ஃபார்மா சக்தி’ திட்டத்தை FM நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் முன்மொழிந்தார். இத்திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம், விலை உயர்ந்த மருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதுடன், அவை பொதுமக்களுக்கு குறைந்த விலையிலேயே கிடைக்க வழிவகை செய்யப்படும்.
News February 2, 2026
ஜிஎஸ்டி வசூல் ₹1.93 லட்சம் கோடி

கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி ₹1.93 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2025 ஆண்டு ஜனவரி மாதம் ₹1.84 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் இந்தாண்டு 6.2% அதிகரித்துள்ளது. இதில் உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் ₹1.41 லட்சம் கோடி என்றும், தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 5% உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


