News January 23, 2026

டிரம்ப்பின் கோபத்துக்கு ஆளான கனடா

image

அமைதி வாரியத்தில் சேர கனடாவுக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெற்றார் டிரம்ப். காஸாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கியுள்ள இந்த அமைப்பில் இணைய அனைத்து நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பொருளாதார பலம் மற்ற நாடுகளை அச்சுறுத்தும் ஆயுதமாக மாறியுள்ளது என கூறி இதில் சேர மறுத்தார் கனடா PM கார்னி. இதனால் டென்ஷனான டிரம்ப், அந்நாட்டுக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெற்றார்.

Similar News

News April 14, 2026

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை குறைகிறது REASON

image

ஏப்.19, ஞாயிற்றுக்கிழமையன்று அட்சய திருதியை கொண்டாடப்படும் நிலையில், காலை, மாலை இரு வேளைகளிலும் விலை மாற்றம் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய சூழலில் தங்கத்தின் விலையை ஈரான் போரே தீர்மானிக்கிறது. எனவே, போர் முடிவுக்கு வந்தால் அன்றைய நாளில் தங்கம் விலை உயருமாம். அதேநேரம், அன்றைய தினத்திற்குள் போர் முடிவடையவில்லை எனில் தங்கம் விலை குறையும் என கூறுகின்றனர்.

News April 14, 2026

லோக் சபா தொகுதிகள் 850 ஆக உயர்கிறது

image

தொகுதி மறுவரையறைக்கு பிறகு லோக் சபா தொகுதிகள் 543-ல் இருந்து 850 ஆக உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களுக்கு 815 தொகுதிகளும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 தொகுதிகளும் ஒதுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தொகுதி மறுவரை மசோதா உள்ளிட்ட மசோதாக்கள், ஏப்.16-ல் தொடங்கும் சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ளன.

News April 14, 2026

நெசவாளர்களுக்கு ₹3,000 ஓய்வூதியம்: விஜய்

image

திருப்பூரில் நெசவாளர்களுக்கான புதிய வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார். *தயாரிப்புகளை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த E-Commerce பிராண்ட் உருவாக்கப்படும் * நகரங்களில் ‘வெற்றி தறி’ ஷோ ரூம்கள் திறக்கப்படும் * நிலையற்ற நூல் விலை, மின் கட்டண உயர்வால் பாதிக்கப்படும் கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ₹30,000 வழங்கப்படும் *நெசவாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதந்தோறும் ₹3,000 தரப்படும்.

error: Content is protected !!