News January 23, 2026

டிரம்ப்பின் கோபத்துக்கு ஆளான கனடா

image

அமைதி வாரியத்தில் சேர கனடாவுக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெற்றார் டிரம்ப். காஸாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கியுள்ள இந்த அமைப்பில் இணைய அனைத்து நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பொருளாதார பலம் மற்ற நாடுகளை அச்சுறுத்தும் ஆயுதமாக மாறியுள்ளது என கூறி இதில் சேர மறுத்தார் கனடா PM கார்னி. இதனால் டென்ஷனான டிரம்ப், அந்நாட்டுக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெற்றார்.

Similar News

News January 31, 2026

பெரும் கஷ்டத்தை போக்கும் அற்புத மூலிகை

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ➤பெருங்காயப் பொடியை வறுத்து, வலி உள்ள சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி குறையும் ➤பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் பிரச்னை தீரும் ➤தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.

News January 31, 2026

குப்பை வண்டியில் உணவா..: அண்ணாமலை

image

தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டபோது அதை வழங்காமல், உணவு வழங்குவதாக கூறி CM ஸ்டாலின் விளம்பர நாடகம் நடத்தினார் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். அவர்களை அவமானப்படுத்தும் விதமாக குப்பை வண்டியில் உணவு கொடுக்கப்பட்டதாக கூறிய அவர், இந்த தரமற்ற உணவைக் கூட வெகுநேரம் காக்க வைத்தே திமுக அரசு வழங்குகிறது என்றார். மேலும், தூய்மை பணியாளர்களின் சுயமரியாதையை CM காயப்படுத்துகிறார் எனவும் கூறியுள்ளார்.

News January 31, 2026

CBFC புதிய மனுவால் ஜன நாயகன் குழு அதிர்ச்சி

image

‘ஜன நாயகன்’ பட விவகாரத்தில் CBFC தரப்பில் SC-ல் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சென்னை HC உத்தரவுக்கு எதிராக படக்குழு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தங்களின் வாதத்தையும் கேட்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவது குறித்த வழக்கை தனி நீதிபதியே விசாரிக்க HC தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

error: Content is protected !!