News January 15, 2026

டிரம்புக்கு ஈரான் நேரடியாக கொலை மிரட்டல்

image

ஈரானில் நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த டிரம்ப், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா ராணுவ நடவடிகை எடுக்க நேரிடும் என எச்சரித்தார். இந்நிலையில், ஈரான் அரசு டிவி, 2024-ம் ஆண்டு பிரசாரக் கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் டிரம்ப் காயமடைந்த புகைப்படத்தை வெளியிட்டு, ‘இந்த முறை இலக்கை தோட்டாக்கள் தவற விடாது’ என நேரடியாக கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

Similar News

News February 9, 2026

டிஜிட்டல் மோசடி.. உடனடி நடவடிக்கைக்கு SC உத்தரவு

image

டிஜிட்டல் நிதி மோசடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க SC மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மோசடிகளுக்கு வங்கிகளின் அலட்சியமே காரணம் என குறிப்பிட்ட SC, டிஜிட்டல் மோசடியால் ₹54,000 கோடிக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் டிஜிட்டல் கைது வழக்குகளை சிபிஐ விசாரிக்கவும், மோசடிகளைத் தடுக்க RBI தயாரித்துள்ள SOP-ஐ உடனடி செயல்படுத்தவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

News February 9, 2026

BREAKING: ‘ஜன நாயகன்’ படம் ரிலீஸ்.. புதிய அறிவிப்பு

image

ஜன நாயகன் படத்திற்கு சென்சார் சான்று கோரிய வழக்கை வாபஸ் பெறுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படம் சென்சார் போர்டின் <<19091145>>ரிவ்யூ கமிட்டிக்கு<<>> அனுப்பப்பட்டுள்ளதாக காலையில் செய்திகள் வெளியாகின. இந்த கமிட்டி 20 நாள்களுக்குள் சென்சார் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. இதன்மூலம், இம்மாத இறுதியில் (அ) மார்ச் தொடக்கத்தில் ஜன நாயகன் படம் ரிலீசாவது உறுதியாகியுள்ளது.

News February 9, 2026

17 வயது நடிகையை மணந்த நடிகர் டைகர் பிரபாகர்

image

‘உதிரிப்பூக்கள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி அஞ்சுவின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. 17 வயதில் நடிகர் டைகர் பிரபாகரை அவர் திருமணம் செய்துள்ளார். அப்போது, டைகர் பிரபாகரின் வயது 48. மேலும், அவருக்கு இது 4-வது திருமணம். முந்தைய திருமணங்கள் மூலம் பிறந்த மகன்கள், பேபி அஞ்சுவை விட வயதில் மூத்தவர்களாம். இதெல்லாம் தெரிந்த பிறகு டைகர் பிரபாகரை அஞ்சு பிரிந்துவிட்டாராம். SO SAD.

error: Content is protected !!