News March 18, 2025
டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவர் பலி

இண்டூர் அருகே, மாக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த நவீன், (14), ரித்திக்ரோஷன், (11), ஆகிய இருவரும் இன்று காலை இருசக்கர வாகனத்தில் ராஜாகொல்லஹள்ளி அருகே சென்றபோது, முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது மோதியதில், நவீன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ரித்திக்ரோஷனை, தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து, இண்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Similar News
News August 5, 2025
தர்மபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தருமபுரி வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் ஆகஸ்ட் 8, 2025 அன்று காலை 11:00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். இந்த கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் தலைமை தாங்கி, விவசாயிகளின் குறைகளைக் கேட்டுத் தீர்த்து வைப்பார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
News August 4, 2025
தருமபுரி மக்களுக்கு கொண்டாட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தருமபுரி செந்தில்நகர், இலக்கியம்பட்டி, நல்லம்பள்ளி, காலணி, நான்கு ரோடு, குமாரசாமிபேட்டை, காரிமங்கலம், சொன்னம்பட்டி, மாறண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, கொண்டம்பட்டி, பாலக்கோடு, பாளையம், சேசம்பட்டி, கெங்காலபுரம், பென்னாகரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சில நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உங்கள் பகுதியில் மழையா?
News August 4, 2025
தர்மபுரி மக்களே! திருமணம் தடை நீங்க வேண்டுமா?

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அமைந்துள்ளது அருணாசலேஸ்வரர் கோயில். சிறு குன்றின் மீது அமைந்துள்ள இக்கோயில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலுடன் இந்த கோயில் ஒப்பிடப்படுகிறது. திருமண வயதில் இருப்பவர்கள் நல்ல வரன் அமையவும், திருமணத் தடைகள் நீங்கவும் இங்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்குகின்றனர். சீக்கிரம் திருமணம் நடக்க நினைப்பவர்களுக்கு பகிருங்கள்!