News November 28, 2025
டிட்வா புயலின் வேகம் குறைந்தது: IMD

சென்னையில் இருந்து 510 கிமீ தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. மணிக்கு 4 கிமீ வேகத்தில் பயணித்து வந்த புயல் இப்போது 3 கிமீ அளவுக்கு தனது வேகத்தை குறைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. டிட்வா புயலின் தாக்கத்தால் ஏற்கெனவே 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
செங்கல்பட்டு: பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து

தாம்பரம் பல்லிக்கரணை, ராதா நகரில் உள்ள அடுக்குமாடி பர்னிச்சர் கடையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. 9 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ பிடித்ததா என பல்லிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 1, 2025
₹8,119 கோடிக்கு கோயில் நிலங்கள் மீட்பு: சேகர்பாபு

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை 3,865 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும், ₹8,119 கோடி மதிப்பிலான 8,000 ஏக்கர் பரப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ₹1,557 கோடிக்கு உபயதாரர்கள் நிதி உதவி வழங்கி உள்ளதாகவும், அதன் மூலம் 12,000 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.
News December 1, 2025
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி, ஒரு கிராம் ₹12 ஆயிரத்தை தாண்டியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹12,070-க்கும், சவரனுக்கு ₹720 உயர்ந்து ₹96,580-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.


