News August 21, 2024

டிஜிட்டல் வடிவ செய்திகளை அதிகம் விரும்பும் மக்கள்!

image

செய்திகளை ஆப்ஸ், வெப் போன்ற டிஜிட்டல் வடிவ வெளியீடுகளில் படிக்கவே மக்கள் அதிகம் விரும்புவதாக, Humanify ஆய்வில் தெரியவந்துள்ளது. வாசகர்களில் 84% பேர் டிஜிட்டல் பிளாட்பார்ம்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உள்ளங்கைக்குள் அடங்கும் ஃபோனில், தகவலைப் பெற முடிவதே இதற்கு காரணமென எனவும் அவர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில், நம்பகத்தன்மைக்கு பாரம்பரிய ஊடகங்களையே அவர்கள் நாடுவதாக தெரியவந்துள்ளது.

Similar News

News March 29, 2026

கேஸ் சிலிண்டர்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

image

சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தாலும் மக்களிடம் பதற்றம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், எரிபொருள் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக இன்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை 20% – 50% வரை உயர்ந்தாலும், இந்தியாவில் விலை உயர்வு இருக்காது என்றும் உறுதியளித்துள்ளார்.

News March 29, 2026

மாமனார், மாமியாருக்கு மருமகள் ஜீவனாம்சம் தரணுமா?

image

கணவன் மறைவுக்கு பின்பும் மாமனார், மாமியாரை கவனித்து கொள்ளும் மருமகள்கள் உண்டு. ஆனால் அது சட்டப்பூர்வ கடமையா, கணவனின் பெற்றோருக்கு மருமகள் கட்டாயம் ஜீவனாம்சம் அளிப்பது குறித்து குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், மகனை இழந்த முதிய தம்பதி, மருமகளிடம் ஜீவனாம்சம் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். தார்மீக கடமையை சட்டப்பூர்வ கடமையாக செயல்படுத்த முடியாது என்று ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்தது.

News March 29, 2026

ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டி!

image

புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோன்று நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 2 தொகுதிகளிலும் தனது மகன் ஷியாம் கிருஷ்ணசாமியை வேட்பாளராக களமிறக்கியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!