News April 9, 2025

டிஜிட்டல் திருமண அழைப்பிதழ் மோசடி, காவல்துறை எச்சரிக்கை

image

இணைய குற்றவாளிகள் டிஜிட்டல் திருமண அழைப்பிதழ்களை வாட்ஸ் அப்பில் கோப்புகளாக அனுப்புகின்றனர். இந்த கோப்புகளை(Apk file) பதிவிறக்கினால் மோசடியாளர்கள் சட்டவிரோத பண பரிமாற்றங்களுக்கு உங்களது வங்கி கணக்கை பயன்படுத்தி கொள்வார்கள். எனவே தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் திருமண அழைப்பிதழ் வந்தால் அதை தொடவோ திறக்கவோ வேண்டாம். இணைப்புகளை திறப்பதற்கு முன் அனுப்புநரை சரிபார்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்

Similar News

News December 24, 2025

மயிலாடுதுறை: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற டிச.31ம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News December 24, 2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மாதம் ரூ.2000 உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். தேவையான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 5ஆம் தளம் அறை எண்.517 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மயிலாடுதுறை-609305 என்ற முகவரியில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

News December 24, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை (டிச.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!