News December 4, 2024
டிச.9 முதல் இலவச பயிற்சி வகுப்பு

மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் உதவியாளர் ககாலிபணியிடங்களுக்காக தயாராகும் Diploma in Co-operative Management பயின்ற மாணவ, மாணவிகளுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் டிச.9 முதல் தொடங்கப்பட உள்ளதாகவும், விருப்பமுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் https://forms.gle/ebKSyuCpgZB2WFLG9 என்ற google form இணைப்பில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 17, 2025
ராணியப்பேட்டை: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

ராணிப்பேட்டை மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை , விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 17, 2025
முன்னேற்றமில்லாத ராணிப்பேட்டை- நயினார் சாடல்!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “மெட்ராஸ் மாகாணத்தில் மிகப்பழமையான நகராட்சி ராணிப்பேட்டை. கல்வி, மருத்துவம் என எதிலுமே முன்னேற்றமில்லாமல் இருக்கிறது. ஊராட்சி ஒன்றிய பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் சுவர் இடிந்து விழுந்து இறந்து போனது இந்த மாவட்டத்தில் தான். திருவள்ளூரிலும் இதே போல ஒரு மாணவர் இறந்துள்ளது வருத்தமளிக்குறது” என்றார்.
News December 17, 2025
ராணிப்பேட்டை: பால் வாங்க சென்ற மூதாட்டி பலி!

பாத்திரக்காரன்பட்டியை சேர்ந்த மூதாட்டி சுகுணா (70) நேற்று (டிச.16) வீட்டின் அருகில் உள்ள சாலையில் பால் வாங்குவர்தற்காக நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த தனியார் வேன் ஒன்று மூதாட்டியின் மீது மோதியது. காயமடைந்த மூதாட்டியை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திமிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


