News December 19, 2025
டிச.24-ல் தமிழகம் முழுவதும் போராட்டம்

MGNREGA-க்கு மாற்றாக கொண்டுவந்துள்ள VB-G-RAM-G மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 24-ம் தேதி திமுக கூட்டணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. TN முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் நடத்த உள்ளன. 100 நாள் வேலைத்திட்டத்தை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுவதாகவும் திமுக கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது. உங்கள் கருத்து?
Similar News
News December 22, 2025
விஜய் கட்சியின் டெபாசிட் காலி: அர்ஜுன் சம்பத்

ஈரோட்டில் விஜய் நடத்திய பொதுக்கூட்டம் படுதோல்வி அடைந்ததாக அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் உள்ள 70 தொகுதிகளிலும் தவெக டெபாசிட் இழக்கும் எனக் குறிப்பிட்ட அவர், திமுகவின் Toolkit ஆக விஜய் செயல்படுகிறார் என்றும் அவர் சாடியுள்ளார். ஒவ்வொரு தேர்தலுக்கும் திமுக ஒரு நடிகரை களமிறக்கும், அந்த வகையில் மற்றொரு மக்கள் நீதி மய்யமாக(கமல்) விஜய்யின் தவெக கட்சி இயங்குவதாகவும் கூறியுள்ளார்.
News December 22, 2025
பாஜக, RSS சதியை தடுக்க வேண்டும் : மாணிக்கம் தாகூர்

மதுரையை மையமாகக் கொண்டு தமிழகத்தில் மதவெறி அரசியலைத் தூண்ட பாஜக, RSS சதி செய்வதாக காங்., MP மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். இதை தடுக்க வேண்டியது தமிழர்களின் கடமை எனக் கூறிய அவர், தமிழருவி மணியன் மறைமுகமாக பாஜக, RSS-க்கு வேலை பார்ப்பவர். தற்போது ஜி.கே.வாசனுடன் சேர்ந்துள்ளார். அவர் சேர்ந்த இடம் வெற்றிபெற்றதே இல்லை என்று விமர்சித்துள்ளார்
News December 22, 2025
Indian 11 Vs Dropped 11.. சவால் விடும் ரசிகர்கள்

<<18621772>>டி20 WC-க்கான இந்திய அணியில்<<>> ஜெய்ஸ்வால், சிராஜ், KL ராகுல் இல்லை என ரசிகர்கள் என வருந்துகின்றனர். இந்நிலையில் தேர்வாகாத வீரர்களை வைத்து Dropped 11-ஐ உருவாக்கி, அவர்களை Indian 11-னுடன் மோதவிட வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர். Dropped 11: ரிதுராஜ், ஜெய்ஸ்வால், ஸ்ரேயஸ்(C), பண்ட், ராகுல், நிதிஷ் ரெட்டி, குருணல் பாண்ட்யா, ஷமி, சிராஜ், புவனேஷ்வர், சாஹல் உள்ளனர். இந்த அணி தேர்வு எப்படி?


