News August 13, 2025

டிசைனிங் ‘ஜாம்பவான்’ குமார் காலமானார்!

image

1000 படங்களுக்கு மேல் பணியாற்றிய போஸ்டர் & டிசைனிங் ‘ஜாம்பவான்’ குமார்(67) உடல்நலக் குறைவால் காலமானார். 1983-ல் வெளியான ‘சலங்கை ஒலி’ படத்தில் தொடங்கி ‘சபாஷ் நாயுடு’ வரை தொடர்ச்சியாக கமலுடன் குமார் பணிபுரிந்துள்ளார். தேவர் மகன், விருமாண்டி, தளபதி, படையப்பா, கில்லி, வல்லவன் என பல Iconic பட போஸ்டர்கள் இவரின் கைவண்ணம்தான். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

Similar News

News August 13, 2025

உடலுறுப்புகளை தானம் செய்ய இன்றே முடிவெடுங்கள்!

image

‘இறந்தும் வாழ்கிறார்’ என்ற சொல்லே நாம் வாழ்ந்ததற்கான அடையாளம். இதற்கு நமது நன்மை மிகுந்த செயல்பாடுகள் ஒரு அடையாளமாக இருந்தாலும், இறப்பின் விளிம்பில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் உடலுறுப்பு தானம் நமக்கு மேலும் புகழ் சேர்க்கும். உடலுறுப்பு தானம் செய்பவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு என்ற முன்னெடுப்பும் தமிழகத்தில் உள்ளது. உடலுறுப்பு தான தினமான இன்று, உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வாருங்கள்!

News August 13, 2025

சிக்கித் தவிக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்?

image

நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜின் திருமண சர்ச்சை இன்னும் ஓயவில்லை. திருமண செய்தி வெளியான அடுத்த நாளே, தான் கர்ப்பம் என 2-வது மனைவி ஜாய் கிரிசில்டா கூறினார். ஆனால், <<17386595>>முதல் மனைவி ஷ்ருதியுடன்<<>> நேற்று நிகழ்ச்சியில் ரங்கராஜ் பங்கேற்றது பல கேள்விகளை எழுப்பியது. இதனிடையே, மெடிக்கல் செக் அப் படங்களை பதிவிட்ட கிரிசில்டா, குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என பெயர் வைத்துள்ளாராம். ஒரே குழப்பம்!

News August 13, 2025

மோடி ஜி.. ரோடு சரியில்ல… லெட்டர் எழுதிய சுட்டி!

image

பெங்களூருவின் டிராபிக்கால் மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து 5 வயது சிறுமி ஒருவர், PM மோடிக்கு லெட்டர் எழுதி இருக்கிறார். அதில், ‘மோடி ஜி, ஓவர் டிராபிக்கால் ஸ்கூலுக்கும் ஆபிஸுக்கும் லேட்டாக போகிறோம், ரோடு மோசமாக இருக்கு. ஹெல்ப் பண்ணுங்க’ என எழுதியுள்ளார். இந்த லெட்டர் வைரலாக, PM மோடி இதற்கு என்ன செய்ய போகிறார்? என நெட்டிசன்கள் வினவி வருகின்றனர்.

error: Content is protected !!