News December 12, 2025
டிகிரி போதும்… ₹24,000 சம்பளம்!

☆Nainital Bank Limited காலியாக உள்ள Customer Service Associate, Probationary Officers உள்ளிட்ட 185 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ☆கல்வித்தகுதி: டிகிரி ☆வயது: 21 – 32 வரை ☆தேர்ச்சி முறை: Written test, Personal Interview ☆விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.01.2026 ☆சம்பளம்: ₹24,050 – ₹93,960 ☆முழு தகவலுக்கு <
Similar News
News December 14, 2025
தாய்லாந்து கடற்கரை பகுதிகளில் ஊரடங்கு!

கம்போடியாவின் <<18550033>>கோ கோங்<<>> மாகாணத்தின் மீது தாய்லாந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இருநாடுகள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தாய்லாந்தின் தென்கிழக்கு மாகாணமான டிராட்டில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுற்றுலா தீவுகள் தவிர்த்து, 5 மாவட்டங்களில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக கிழக்கு சாகியோ மாகாணத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.
News December 14, 2025
AK64 ஷூட்டிங்.. ஆதிக் கொடுத்த அப்டேட்

AK64 ஷூட்டிங் எப்போது என காத்துக்கிடந்த அஜித் ரசிகர்களுக்கு, புதிய அப்டேட்டை ஆதிக் ரவிச்சந்திரன் தந்துள்ளார். இப்படம் Good Bad Ugly-ல் இருந்து மாறுபட்டது என்றும், திரைக்கதையை சிறப்பாக உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பிப்ரவரியில் ஷூட்டிங்கை தொடங்குவதாகவும் ஆதிக் அறிவித்துள்ளார். எனினும், தயாரிப்பாளர் கிடைக்காத நிலையில் ஷூட்டிங் தொடங்குமா என அஜித் ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.
News December 14, 2025
இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகாது: தவெக

தவெகவின் <<18559193>>வேட்பாளர்கள் <<>>பட்டியல் இன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இது முற்றிலும் தவறான தகவல் என்று புஸ்ஸி ஆனந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தவெகவின் வேட்பாளர்களை விஜய் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனக் கூறிய அவர், தலைவர் (விஜய்) சொல்வதை அப்படியே பின்பற்றுவோம் என்றார். இதனால், வேட்பாளர்கள் அறிவிப்பு அடுத்த வாரம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.


