News January 2, 2026

டிகிரி போதும்.. வங்கியில் ₹65,000 சம்பளம்!

image

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✦கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ✦வயது: 25- 40 ✦தேர்ச்சி முறை: Online Test, Personal Interview ✦விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 5-ம் தேதி ✦ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்யவும் ✦சம்பளம் – ₹64,820 – ₹1,20,940 ✦வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதனை பகிரவும்.

Similar News

News January 29, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு

image

அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், சார்புச் செயலாளர், பிரிவு அலுவலர் உள்ளிட்ட 13 பணியிடங்கள் பதவி உயர்விற்குத் தகுதியானவை என அவர்களுக்கு வழங்க தகுந்த பதவிகளை அடையாளம் கண்டு உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடிப் பணி நியமனத்தில் வழங்கப்படுவது போலவே, பதவி உயர்விலும் அதே 4 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News January 29, 2026

அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

image

OPS-ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை என கூறிய EPS, OPS-ன் ஆதரவாளர்களை அதிமுகவில் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில், திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் காமராஜ், மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி, மாவட்ட பொருளாளர் ஜீவா செல்வம், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கவிதா உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் EPS முன்னிலையில், இன்று அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளனர்.

News January 29, 2026

விஜய் கொடுக்கும் Boost தேவையில்லை: காங்.,

image

திமுக- காங்., கட்சியினருக்கு இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில், ‘ஆட்சியில் பங்கு’ என விஜய் கூறுவதை பயன்படுத்திக் கொண்டால் காங்கிரஸுக்கு மீண்டும் பவர் கிடைக்கும் என விஜய்யின் தந்தை <<18982071>>SAC <<>>கூறியிருந்தார். இந்நிலையில், எங்களுக்கு யாரும் Boost தரத் தேவையில்லை. ஏற்கெனவே, எங்கள் தலைவர் ராகுல் Boost, Horlicks கொடுத்திருக்கிறார் எனக்கூறிய செல்வபெருந்தகை, SAC-யின் கூட்டணி அழைப்பை நிராகரித்துள்ளார்.

error: Content is protected !!