News April 9, 2025
டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (10ம் தேதி) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் எப்.எல். 1 மற்றும் அவற்றுடன் செயல்படும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும், அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவை நாளை மூடப்பட வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 13, 2025
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபர்க்கும் பணி

சட்டமன்ற பொது தேர்தல் 2026-யை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் நிலை சரி பார்க்கும் பணி பார்வையாளரும், இணை தலைமை தேர்தல் அலுவலருமான பால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று இயந்திர சரிபார்க்கும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
News December 13, 2025
திருப்பூர் அருகே விபத்து: ஒருவர் பலி!

ஊத்துக்குளி ரயில் நிலைய பகுதியைச் சேர்ந்த சாமியப்பன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் கொடியம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் சாமியப்பனின் வாகனம் மீது மோதியுள்ளார். இதில் தடுமாறி கீழே விழுந்த சாமியப்பன், படுகாயம் அடைந்த நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் உயிரிழந்தார்.
News December 13, 2025
திருப்பூரில் இலவச தையல் பயிற்சி!

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி (Self Employed Tailor) (with Hand Embroidery) விரைவில் வழங்கப்படவுள்ளது. 50 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் மற்றும் எம்ராய்டரி தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை<


