News April 5, 2024
டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (அக். 14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News October 14, 2025
ஓசூரில் குழந்தைகள் காப்பகம் முதல்வர் திறந்து வைத்தார்

தமிழக தொழில் துறை சார்பில் ஓசூரில் தொழில் பூங்கா வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தை, தமிழக முதலவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (அக்.14) காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தொழில் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு குழந்தைகளை பாதுகாப்பாக வைக்க இந்த காப்பகம் பெரும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News October 14, 2025
கிருஷ்ணகிரி: தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் செயல்படும் தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கு காலியாக உள்ள 11 இடங்களுக்கு அக். 15 மற்றும் 31-ஆம் தேதிகளில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து அந்த மையத்தின் துணை இயக்குநர் து.மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.மேலும் விவரங்களுக்கு 73587 85872, 72007 83122 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்