News January 21, 2026
டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

டாஸ்மாக் கடைகள் ஆண்டுக்கு 8 நாள்கள் மட்டுமே இயங்காது. ஆனால், அடுத்த 10 நாள்களில் மட்டும் 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதாவது, ஜன.26-ம் தேதி குடியரசு தினம் மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாள்களில் தமிழகத்தில் மது விற்பனை கிடையாது. இவ்விரு நாள்களிலும் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News February 5, 2026
சிறப்பு யாகம் நடத்திய பொன்முடி?

தேர்தலில் எதிரிகளை வீழ்த்துவதற்காக Ex அமைச்சர் பொன்முடி, தனது புதிய வீட்டில் சிறப்பு யாகத்தை நடத்தியதாக ஊடகங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. தேர்தலில் வென்று மீண்டும் அமைச்சராகணும், வழக்குகளில் இருந்து விடுபடணும் என்ற வேண்டுதல்களுடன் யாகம் நடத்தினாராம். ரகசியமாக நடந்த இந்நிகழ்வு குறித்து அறிந்த திமுகவினர், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் தற்போது தேர்தலுக்காக மாறிவிட்டாரே என புலம்புகின்றனராம்.
News February 5, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 5, தை 22 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சதுர்த்தி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்
News February 5, 2026
₹30,000 சம்பளம்.. 10th தகுதி போதும்

சென்னையில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில்(HVF) காலியாக உள்ள 220 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷாட் பிளஸ்டர், மெஷினிஸ்ட், மெட்டீரியல் ஹேன்ட்லிங் உள்ளிட்ட பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, ITI கல்வித் தகுதி போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்பு, டிரேடு தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். பிப்.14-க்குள் avnl.co.in தளத்தில் விண்ணப்பிக்கவும். சம்பளமாக ₹30,000 வழங்கப்படும்.


