News August 13, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – ஆட்சியர்

image

வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.பழனி அறிவித்துள்ளார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரித்துள்ளார்.

Similar News

News July 11, 2025

திண்டிவனம்; தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19.07.2025 சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் மதியம் 3.00 மணிவரை திண்டிவனம்புனித அன்னாள் கலை & அறிவியல் கல்லூரி, நடைபெற உள்ளது. இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News July 11, 2025

கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்திற்கு அழைப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்திற்கு திறன்மிக்க சமூக தொண்டாற்றுவதில் ஆர்வமுள்ள கிறிஸ்துவ சமுதாயத்தை சேர்ந்தோர் வரும் ஜூலை 18ஆம் தேதிக்குள் மாவட்ட சிறுபான்மையினர நல அலுவலகத்தில் பெயர், முகவரி, கல்வித் தகுதி, குடும்ப விபரம் மற்றும் சமூகத் தொண்டுகள் ஆகிய சுய விபரங்களோடு விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

News July 11, 2025

விழுப்புரம்-சென்னை தடத்தில் அதிவேக ரயில்

image

விழுப்புரம் முதல் சென்னை வரை 167 கி.மீ தூரத்திற்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கக்கூடிய புதிய அதிவேக ரயில் சேவைக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் நிறைவேறும்பட்சத்தில் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு 1 மணி நேரத்தில் செல்ல முடியும். இந்த ரயில் விழுப்புரம் – திண்டிவனம் – காஞ்சிபுரம் – சென்னை வழி தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!