News November 25, 2025

டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் ரூல்ஸ் மாறியது

image

நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமலில் உள்ளது. இதனை TN முழுவதும் நவ.30-க்குள் அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, திருச்சியில் இன்றுமுதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பிற மாவட்டங்களிலும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்மூலம், விற்பனை விலையுடன் கூடுதலாக ₹10 கொடுத்து மது வாங்க வேண்டும். காலி பாட்டிலை ஒப்படைத்து அதனை பெற்றுக் கொள்ளலாம்.

Similar News

News April 8, 2026

இவர்களிடம் இருந்து விலகி இருங்க: ரஜினி அட்வைஸ்

image

நடிகர்களின் வாகனத்தை பின் தொடராமல் இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என மறைமுகமாக விஜய் ரசிகர்களை ரஜினி அறிவுரை கூறியுள்ளார். படிக்கிற நேரத்தில் படிக்க வேண்டும்; அதை விட்டுவிட்டால் ரொம்ப கஷ்டப்படுவீர்கள் எனக்கூறிய அவர், மது, கஞ்சா போன்றவற்றை இளைஞர்கள் தொடவே கூடாது என்றார். மேலும், போதைப் பழக்கத்தோடு நண்பர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தினார்.

News April 8, 2026

மூன்று மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்: EPS

image

திமுக ஆட்சியில் ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டால் திமுகவினர் அடித்து உதைத்து, வியாபாரிகளை மிரட்டுவதாக EPS விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் எது கிடைக்கிறதோ இல்லையோ, கஞ்சா கிடைக்கிறது என்ற அவர், திமுக நிர்வாகிகள் துணை நிற்பதால் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை என சாடினார். மேலும், அதிமுக ஆட்சி அமைந்த 3 மாதத்தில் கஞ்சா முழுமையாக ஒழிக்கப்படும் என உறுதியளித்தார்.

News April 8, 2026

வெள்ளி நகை விலை இன்று ₹10,000 மாறியது

image

<<19594877>>தங்கத்தை<<>> போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹10 உயர்ந்து ₹265-க்கும், கிலோவுக்கு ₹10,000 அதிகரித்து ₹2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 7% வரை உயர்ந்து 1 அவுன்ஸ்(28g) 78 டாலர்களுக்கு விற்பனையாகிறது. வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை உயரும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!