News December 2, 2025
டாக்டர் கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு

சிவகாசி அருகே மாரனேரி பகுதிகளில் கடந்த 25ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பாக மதுரையில் ஜனவரி 7ல் நடைபெறும் மாநாடு குறித்து அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது இரவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக டாக்டர் கிருஷ்ணசாமி,மத்திய மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 8 பேர் மீது மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 3, 2025
விருதுநகர்: குழந்தை தத்தெடுத்து வளர்க்க அழைப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம். குழந்தையை தத்தெடுக்க விருப்பமுள்ளவர்கள் https://missionvatsalya.wcd.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் . மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை ( 04562 – 293946) தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
விருதுநகரில் 24 மணி நேரத்தில் இவ்வளவு மழையா?

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 74.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருச்சுழி பகுதியில் 21 மில்லி மீட்டர் மழையும் ராஜபாளையம் பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும் காரியாபட்டி பகுதியில் 14 மில்லி மீட்டர் மழையும் கோவிலாங்குளம் பகுதியில் 7.60 மில்லி மீட்டர் மழையும் அருப்புக்கோட்டையில் 6.20 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
News December 3, 2025
விருதுநகர்: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

விருதுநகர் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!


