News April 22, 2025
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 21) மாலை ஹவாரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் ஜோலார்பேட்டை வரும் ரயில்களை சோதனை நடத்திய போது பொது பெட்டியில் 4 மூட்டையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூபாய் 7 லட்சம். இதனை சென்னை போதை பொருள் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 22, 2025
மின்தடையா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், (6380281341) என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு <
News April 22, 2025
திருப்பத்தூர் அருகே வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை

திருப்பத்தூரை சேர்ந்த மஞ்சுநாதன் (31) என்பவர் உறவினர் பெண்ணான 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில், அவருக்கு நீதிபதி 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
News April 21, 2025
திருப்பத்தூர் பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Online Courier டெலிவரி என கூறி OTP Scam செய்யும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாக இருங்கள் என திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு அம்மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதுபோன்ற ஏதேனும் தொலைபேசி எண்களில் இருந்து அழைப்பிதழ் வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.