News April 6, 2024
ஜோலார்பேட்டை அருகே இளம் பெண் மீட்பு

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி சேர்ந்த திவ்யா இவர் கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தந்தை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலிசார் விசாரணை செய்த நிலையில் இன்று தி.மலை மாவட்டத்தில் இருந்த இளம் பெண் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News April 18, 2025
இலவச கோடைக்கால பயிற்சி முகாம் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெற உள்ளது. தடகளம், கபடி, கூடைப்பந்து, கால்பந்து மற்றும் கை பந்து என 5 விளையாட்டிற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 7401703463 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க
News April 18, 2025
துக்க வீட்டில் மீண்டுமொரு துக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (45). இவரது பெரியப்பா மகள் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில் காரியம் முடிந்து கோவிலில் வழிபாடு செய்ய குடும்பத்துடன் வந்துள்ளார். கனகநாச்சியம்மன் கோவிலில் சடங்குகளை முடித்துவிட்டு தடுப்பணையில் குளிக்க சென்ற போது சண்முகம் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 5 மணி நேரத்திற்கு மேல் போராடி உடலை மீட்டனர்.
News April 17, 2025
திருமண தடை நீங்க முக்கியமான கோயில்

திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் பகுதியில் அமைந்துள்ளது 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்கநாதேஸ்வரர் கோயில். அங்கம் பிளவு பட்டு இருப்பதால் அவர்களை அங்க நாதேஸ்வரர் என்ற பெயர் சொல்லி அழைக்கின்றனர்.இந்த கோயிலில் அம்மன் சுபத்ரா ஜனனி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்,இதனால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம்நடைபெறும் சிறப்பும் உள்ளது. திருமண தடையுள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க