News May 7, 2024
ஜோலார்பேட்டையில் வாலிபர் பலி

மேற்கு வங்காளம் பார்பரா பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன் லாகூர் (44). இவர் நேற்று ஜோலார்பேட்டை ரயில்வே ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும்போது திடிரென வலிப்பு நோய் ஏற்பட்டு கிழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலிசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 27, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 27) இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
திருப்பத்தூரில் அமெரிக்கா விதித்த வரியால் வேலை இழப்பு

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல தோல் தொழற்சாலைகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 300க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.100 கோடி ஏற்றுமதி பாதிக்கும் என கூறப்படும் நிலையில் லட்சக்கணக்கானோர் வேலை இழப்பார்கள் என தொழிற்துறை வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
News August 27, 2025
திருப்பத்தூர்: அரசு பேருந்து குறித்து புகார் அளிக்க வேண்டுமா?

திருப்பத்தூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!