News January 29, 2026
ஜோலார்பேட்டையில் சரமாரி தாக்குதல்!

ஜோலார்பேட்டை அருகே பெரியமூக்கனூர் கிராமத்தில் கோவிந்தராஜ் மற்றும் இந்திராகாந்தி குடும்பத்தினரிடையே நீண்டகாலமாக சொத்து தகராறு இருந்துள்ளது. நிலத்தை அளக்கச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் கற்களால் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த 8 பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புகார்களின் அடிப்படையில் 8 பேர் மீது ஜோலார்பேட்டை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Similar News
News February 10, 2026
வனத்துறை சார்பில் காட்டு தீ தடுப்பு முன்னெச்சரிக்கை ஆய்வுக்கூட்டம்!

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (பிப்.10) வனத்துறை சார்பில் காட்டுத் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை டாக்டர் உமா மகேஸ்வரி மற்றும் பலர் உள்ளனர்.
News February 10, 2026
புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறந்த எம்.எல்.ஏ.

திருப்பத்தூர் அடுத்த, மாடப்பள்ளி கிராமத்தில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட, உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை இன்று (பிப்.10) திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும், திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர், நாராயணன், மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
News February 10, 2026
சுகாதார வளாகத்தை திறந்து வைத்த வட்டார வளர்ச்சி அலுவலர்

கந்திலி ஒன்றியம் பெரிய கரம் ஊராட்சி அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மக்கள் நல சங்கம் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மனு அளித்தார். அதன் பேரில் இன்று (பிப். 10) கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பெரியகரம் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் திறக்கப்பட்டது.


