News January 2, 2026
ஜோதிமணியின் பதிவு அதிர்ச்சியளிக்கிறது: SP

அழிவின் பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் செல்வதாக <<18740431>>ஜோதிமணி<<>> SM-ல் பதிவிட்டது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் வளர்ச்சிக்கு அனைவரும் உழைக்கும்போது, அவர் ஏன் இவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை என செல்வப் பெருந்தகை(SP) தெரிவித்துள்ளார். ஜோதிமணி மாவட்டத்தில்(கரூர்) உட்கட்சி பிரச்னை இருப்பது உண்மையே, தான் அதை தீர்த்து வைத்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Similar News
News January 6, 2026
FLASH: தளபதி கச்சேரி புக்கிங் தொடங்கியது

Bookmyshow, Ticketnew போன்ற தளங்களில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டிக்கெட் புக்கிங் தமிழகத்தில் தொடங்கியது. சென்சார் சான்றிதழ் லேட்டான சூழலில், ‘தளபதி கச்சேரி’ புக்கிங் எப்போது என நேற்று முதலே ரசிகர்கள் தவித்து போயிருந்தனர். H.வினோத் இயக்கத்தில் விஜய்யுடன் மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நீங்க டிக்கெட் போட்டாச்சா?
News January 6, 2026
தங்கம் சவரனுக்கு ₹560 உயர்ந்தது

ஆபரண தங்கம் விலை இன்று(ஜன.6) கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹12,830-க்கும், சவரன் ₹560 உயர்ந்து ₹1,02,640-க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டின் முதல் நாள் தங்கம் விலை சரிவுடன் தொடங்கிய நிலையில், அடுத்தடுத்த நாள்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 5 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,120 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 6, 2026
₹6,000.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

போக்குவரத்து துறை ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, 2016 செப்.,க்கு முன் ஓய்வுபெற்றவர்களுக்கு 221%-ல் இருந்து, 257% ஆகவும், 2016 செப்.,க்கு பின் ஓய்வு பெற்றவர்களுக்கு 42%-ல் இருந்து 58% ஆகவும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் குறைந்தபட்சம் ₹2,000 முதல் ₹6,000 வரை கூடுதலாக கிடைப்பதால் ஓய்வூதியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


