News October 27, 2024

ஜோதிடம் பார்ப்பதாக மூதாட்டியிடம் நகைப்பறித்த 2 பேர் கைது

image

மேச்சேரி உப்புபள்ளம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (60) வீட்டில் தனியாக இருந்த போது 2 பெண்கள் ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி பரிகாரம் செய்ய 1/2 பவுன் தோடு, ரூபாய் 4,000 பணம் பெற்றுக் கொண்டு மாயமாகினர். மேச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருச்சி தொட்டியத்தை சேர்ந்த ரேவதி (20) மற்றும் மற்றும் வைத்தீஸ்வரி (26) ஆகியோரை கைது செய்தனர்.

Similar News

News January 25, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.25) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News January 25, 2026

FLASH: சேலம் சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ விருது!

image

இந்தியாவின் 4வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுக்கு சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் காளியப்ப கவுண்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிற்பக் கலைத்துறையில் சாதனை படைத்த இவர், தஞ்சைப் பெரிய கோயிலின் பாம்பு சிற்பம் மற்றும் குடியாத்தத்தில் உள்ள 13 அடி உயர நடராஜர் சிலையையும் செதுக்கியவர். குடியரசு தினத்தை முன்னிட்டு இவரது கலைப்பணியைப் பாராட்டி மத்திய அரசு இந்த உயரிய விருதை அறிவித்துள்ளது.

News January 25, 2026

சேலம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சேலம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!