News January 22, 2026
ஜெ., போல விஜய்யும் ஜெயிப்பார்: செங்கோட்டையன்

திமுகவும் அதிமுகவும் தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்று வருகின்றன. ஆனால், தவெகவோ செயல்படாமல் முடங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், 2011 தேர்தலின்போது மூன்றே இடங்களில் மட்டும் பொதுக்கூட்டம் நடத்தி வெற்றி பெற்ற ஜெ.,வை போல விஜய்யும் வெற்றி பெறுவார் என செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். TTV – OPS ஆதரவாளர்கள் விரைவில் தவெகவில் இணைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News February 17, 2026
வங்கிக் கணக்கில் 2,000.. வந்தாச்சு HAPPY NEWS

விவசாயிகளுக்கான PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகை ₹2,000, மார்ச் முதல் வாரத்தில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது e-KYC முடித்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதால், அதனை முடிக்காதவர்கள் pmkisan.gov.in என்ற இணையதளத்தில் அப்டேட் செய்யுங்கள். முக்கியமாக, உங்கள் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, உடனே செய்யுங்கள்.
News February 17, 2026
வங்கதேசத்தின் புதிய பிரமதர் பதவியேற்பு!

வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று மாலை பதவியேற்று கொண்டார். அந்நாட்டின் அதிபர் முகமது சஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தாரிக் கேபினட்டில், இந்துவான நிதாய் ராய் சௌத்ரி அமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்த விழாவில் இந்தியா சார்பில் லோக்சபா தலைவர் ஓம் பிர்லா கலந்துகொண்டார். மேலும், வங்கதேசத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் ஒருவர் பிரதமராக பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 17, 2026
T20 WC: வெளியேறியது ஆஸ்திரேலியா!

T20 WC தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி நிகழ்ந்துள்ளது. இன்று நடைபெறவிருந்த ஜிம்பாப்வே – அயர்லாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஜிம்பாப்வே அணி மொத்தம் 5 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. 2 புள்ளிகளுடன் இருக்கும் ஆஸ்திரேலிய அணி, அதன் கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலும் 4 புள்ளிகள் மட்டுமே பெறும். இதன்மூலம், ஆஸி., லீக் சுற்றுடன் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


