News March 6, 2025
ஜெர்மனி நாட்டில் பணிபுரிய விண்ணபிக்கலாம்

ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் <
Similar News
News January 2, 2026
சென்னை மெட்ரோவில் 11.19 கோடி பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் 29 ஜூன் 2015 முதல் 31 டிசம்பர் 2025 வரை மொத்தம் 46,73,41,480 பயணிகள் பயணம் செய்துள்ளனர். 2025 ஆம் ஆண்டில் மட்டும் 11,19,80,687 பயணிகள் பயணம் செய்துள்ளனர். பொதுப் போக்குவரத்தில் மெட்ரோவை உயிர்நாடியாக ஏற்றுக்கொண்ட பயணிகளுக்கு நன்றி தெரிவித்து, இனிய புத்தாண்டு 2026 வாழ்த்துக்களையும் CMRL தெரிவித்துள்ளது.
News January 2, 2026
BREAKING: மெரினா- கடைகளை அகற்ற அதிரடி உத்தரவு

மெரினா கடற்கரையில் உணவுப் பொருட்கள், விளையாட்டு பொருட்கள், பேன்சி பொருட்கள் விற்கும் கடைகள் தவிர வேறு எந்த கடைகளையும் அமைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைவர்களின் நினைவிடங்கள் பின்புறம் நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் கடைகள் அமைக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
News January 2, 2026
BREAKING: வில்லிவாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ தவெக-வில் இணைவு

சென்னை வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி பிரபாகர் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். ஏற்கெனவே அவரது மகன் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது அவரும் அக்கட்சியில் இணைந்துள்ளார். ஜே.சி.டி பிரபாகர் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு 10,782 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.


