News January 15, 2026

‘ஜெயிலர் 2’-ல் ரஜினிக்கு வில்லன் விஜய் சேதுபதியா?

image

இனி தன்னை ஆச்சரியப்படுத்தும் கதைகளில் மட்டும் தான் வில்லனாக நடிப்பேன் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க சொல்லி பலர் தன்னை அணுகுவதாகவும், ஆனால், ஒரு வில்லனை ஹீரோவாக புரொமோட் செய்வதில் தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ரஜினியை பிடிக்கும் என்பதால் ‘ஜெய்லர் 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 28, 2026

BREAKING: சுந்தர்.சி தேர்தலில் போட்டி.. எந்த தொகுதி?

image

மதுரை மத்திய தொகுதியில், புதிய நீதிக்கட்சியின் வேட்பாளராக நடிகர் சுந்தர்.சி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலின்போது, வேலூரில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து சுந்தர்.சி பரப்புரை செய்தார். தற்போது, அதிகாரப்பூர்வமாக அக்கட்சியில் இணைந்துள்ள அவர், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். <<-se>>#TNElection2026<<>>

News March 28, 2026

என் மீது எனக்கே நம்பிக்கை இருந்ததில்லை: விஜய் சேதுபதி

image

தன் மீது தனக்கு நம்பிக்கை இருந்ததே இல்லை என விஜய் சேதுபதி கூறியுள்ளார். தன்னுடைய வேலையை மற்றவர்கள் பாராட்டிய பிறகுதான் தனக்கே அந்த வேலையை ’தன்னால் சிறப்பாக செய்யமுடியும்’ என்பது தெரியவரும் என பேசிய அவர், ஆனால், அதற்கு முன் தன் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் தனக்கு இருந்திருக்கிறார்கள் என்றார். இதுபோல் பலர் தன்னை நம்பியதால் தான், தன் தன்னம்பிக்கை வளர்ந்ததாகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

News March 28, 2026

ஈரான் போர்.. மருந்துகளின் விலை உயர்கிறது

image

இந்தியாவில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பாராசிட்டமால், ஆன்டிபயாட்டிக், Painkiller மருந்துகள் உட்பட மொத்தம் 1000+ மருந்துகளின் விலை உயர்கிறது. இந்த விலை உயர்வு 0.65% இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஈரான் போரால் மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அத்துடன் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

error: Content is protected !!