News February 24, 2026
ஜெயலலிதா பிறந்த நாள்: புதுச்சேரியில் மரியாதை

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள மேரி கட்டிட அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அவரது உருவப்படத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் KSP ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Similar News
News February 27, 2026
புதுச்சேரி: இலவசமாக அரிசி வேண்டுமா?

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் கீழ் வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதற்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டையிருந்தும் வழங்கவில்லை என்றால் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் புகாரளிக்கலாம். SHARE!
News February 27, 2026
“திமுக ஆட்சிக்கு வந்ததும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து”

கதிர்காமம், நெல்லித்தோப்பு தொகுதிகளில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், “புதுச்சேரியில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான்.” என்று புதுச்சேரி திமுக மேலிடப் பார்வையாளரும், கொள்கைப் பரப்புச் செயலருமான எம்.பி ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார். இதில் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கினார். கதிர்காமம் தொகுதி செயலர் வடிவேல் முன்னிலை வகித்தார்.
News February 27, 2026
புதுவை: கடன் பிரச்சனையால் கூலி தொழிலாளி தற்கொலை

காரைக்காலைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஹபிபு ராஜா. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கடன் பிரச்சினையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடு சென்ற ஹபிபு ராஜா, அங்கு வேலை கஷ்டமாக இருப்பதாகக் கூறி, சொந்த ஊர் திரும்பி வந்துள்ளார். இதனால் கடன் சுமை அதிகரித்ததால் மன வேதனையில் ஹபிபு ராஜா பிப்.25 வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.


