News August 31, 2025

ஜெயங்கொண்டத்தில் நகர்ப்புற பசுமை முகாம் தொடக்கம்

image

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நகர்ப்புற பசுமை முகாம் தொடக்கமாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் முன்னிலையில் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஆணையர் அசோக்குமார், தலைவர் சுமதி சிவகுமார், துணைத்தலைவர் கருணாநிதி, அதிகாரிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News September 3, 2025

அரியலூர்: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை வாய்ப்பு

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். (SHARE பண்ணுங்க)

News September 3, 2025

அரியலூர் காவல்துறை எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஒருவர் பயன்படுத்திய போனை வாங்கும் நபர் எனில் வாங்கும் போனில் *#06# டயல் செய்து IMEI எண் எடுக்கவும். www.sancharsaathi.gov.in- என்ற இணையதளத்தில் சென்று உங்களது மொபைல் எண் கொடுத்து, ஓடிபி சரி பார்த்த பின்னர் வாங்கும் போனின் இரண்டு IMEI நம்பரை ஒவ்வொன்றாக உள்ளீடு செய்து அந்த போனின் நம்பகத்தன்மை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

News September 2, 2025

அரியலூர்: போட்டி தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்

image

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் பல்வேறு நிலையிலான 1513 காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 10ம் தேதிமுதல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பபடுபவர்கள் அரியலூர்மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அணுகுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!