News June 14, 2024
ஜெயக்குமார் வழக்கில் முக்கிய தடயம் சிக்கியது

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாருக்கு முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி வெங்கட்ராமன், ஐ..ஜி அன்பு, எஸ்.பி முத்தரசி ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், ஒரு முக்கிய நபரின் செல்போன் எண்கள் குறித்து தீவிர விசாரணை நடப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 14, 2025
நெல்லை முக்கிய ரயில் கோவையில் நிற்காது

சேலம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நெல்லையிலிருந்து பிலாஸ்பூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில்
(எண்: 22620) இன்று மட்டும் கோவையில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாடனூர், இருகூர் வழியாக இந்த ரயில் திருப்பி விடப்படுகிறது. கோவைக்கு பதிலாக பாடனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 14, 2025
நெல்லை மக்களே; ரூ.81,000 வரை சம்பளம்!

நெல்லை மக்களே; மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள்<
News September 14, 2025
நெல்லை: மழைக்காலத்தில் ஒரு மெசேஜ் போதும்!

திருநெல்வேலி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், திருநெல்வேலி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!