News January 20, 2026

ஜெயகாந்தன் பொன்மொழிகள்

image

*யாரைப் பற்றி நினைக்கும்போது மனதிற்கு இன்பமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாம் அழகானவர்கள். *நான் ஒருபோதும் எதையும் அவமானமாகக் கருதியதில்லை. ஏனென்றால், வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம். *ஒரு அனுபவம் இன்னொரு அனுபவத்திற்குத் தடையாகிப் போகும். *சுயவிமர்சனம் உடையோரை, பிற விமர்சனங்கள் பாதிப்பதில்லை. *தன்னை விட தன் திறமை மதிக்கப்பட வேண்டும் என்று நினைப்பது சுயமரியாதை, கர்வம் அல்ல.

Similar News

News February 9, 2026

சற்றுமுன்: விலை மளமளவென குறைந்தது

image

பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக சிக்கன் விற்பனை சற்று சரிந்துள்ளதாக இறைச்சி கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிக்கன் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. அந்த வகையில் நாமக்கல் மொத்த சந்தையில் 1 கிலோ சிக்கன் ₹110 ஆக குறைந்துள்ளது. முட்டை ₹5.25-க்கு விற்பனையாகிறது. சென்னை, மதுரை, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் ஒரு கிலோ சிக்கன் ₹160 – ₹170 வரை குறைந்துள்ளது. உங்கள் ஊரில் 1 கிலோ சிக்கன் எவ்வளவு?

News February 9, 2026

முதலில் நிலவுக்கு போறோம்.. பிளானை மாற்றிய எலான் மஸ்க்

image

செவ்வாய் இல்லை முதலில் நிலவுப் பயணம் என தனது விண்வெளி பிளானை எலான் மஸ்க் மாற்றியுள்ளார். 2027-க்குள் SpaceX நிறுவனம் ஆளில்லா விண்கலத்தை நிலவில் தரையிறக்க உள்ளதாவும், அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் ஒரு நகரத்தை உருவாக்க உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், செவ்வாய்க்கு செல்வதற்கு முன்பு நிலவுப் பயணங்களில் கவனம் செலுத்துவோம் என்று தனது திட்டத்தை மஸ்க் வெளியிட்டுள்ளார்.

News February 9, 2026

கடன் வட்டி தள்ளுபடி.. அறிவித்தது தமிழக அரசு

image

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபராத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை வரும் மார்ச் 31 வரை அமலில் இருக்கும். உடனே முந்துங்கள் நண்பர்களே!

error: Content is protected !!