News July 18, 2024
ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள்!

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கு காரீப் நடவு செய்துள்ள விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நெல் விவசாயி ஏக்கருக்கு ரூ.690 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இதற்கு காப்பீட்டு தொகையாக ரூ.34,500 என தெரிவித்துள்ளனர்.
Similar News
News July 9, 2025
விழுப்புரம்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜுலை 9) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News July 9, 2025
தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை

இன்று (09.07.2025) காலை 11 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத் தலைவர் திப்பம்பட்டி. வெ.ஆறுச்சாமி, தாட்கோ சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இது தூய்மைப் பணியாளர்களின் நலனை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும்.
News July 9, 2025
விவசாயிகளுக்கு ரூ.7.87 கோடி மானிய உதவி

விழுப்புரம் மாவட்டத்தில் நெல் சாகுபடி சிறப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ரூ.7.87 கோடி மானிய உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 55 ஆயிரத்து 918 ஏக்கர் பரப்பில் நெல் உற்பத்திக்கு, மானிய உதவி வழங்கப்படுகிறது. இந்தாண்டு முதல், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டம், செயல்படுத்தப்படுகிறது என வேளாண் துறை அறிவித்துள்ளது.